search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மா பூங்கா"

    சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியம் அனுப்பூர் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #TNCM #EdappadiPalaniswami
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியம் அனுப்பூர் ஊராட்சியில் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா இன்று காலையில் நடைபெற்றது. இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இறகு பந்து விளையாடினார்.

    இதையடுத்து முதல்வர் அம்மா உடற்பயிற்சி கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, உடற்பயிற்சி செய்து பார்த்தார். பின்னர் இளைஞர்களிடையே உரையாற்றினார். பூங்கா ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலும், உடற்பயிற்சி கூடம் தனியாக ரூ. 10 லட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் அனுப்பூர், அயோத்தியப்பட்டணம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் மக்கள் பயன்பெறுவார்கள். இது இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

    இதனை தொடர்ந்து கருமந்துறையில் வனத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழி மற்றும் கோழி வளர்ப்புக்கான கூண்டுகளை வழங்கினார். விலையில்லா கறவை மாடுகள் வழங்கினார்.

    மேலும், வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து கருமந்துறை-சின்னகல்வராயன் மலை வடக்குக்காடு ஊராட்சி பஸ் நிலையத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு வாயிலை திறந்து வைத்தார். சின்னகல்வராயன் மலை ஊராட்சி திடலில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊரக வளர்ச்சி துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, பேரூராட்சிகள் துறைகளின் சார்பில் ரூ.12.77 கோடி மதிப்பில் முடிந்த 16 திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

    மின்பகிர்மான கழகம் சார்பில் ரூ.2.99 கோடி மதிப்பீட்டில் 2 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தீயணைப்பு துறை சார்பில் ரூ.1.25 கோடி மதிப்பிலான 5 பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் பல்வேறு துறைகள் சார்பில் 2 ஆயிரத்து 651 பயனாளிகளுக்கு ரூ.10.40 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    ரூ.12.78 கோடி மதிப்பீட்டில் 16 திட்டப்பணிகள் நடந்து முடிந்து உள்ளன. இந்த பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். பின்னர் 3 புதிய பணிகளை ரூ.2.99 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.1.25 கோடி மதிப்பிலான பணிகளையும் தொடங்கி வைத்தார்.

    இவ்விழாக்களில் கலெக்டர் ரோகிணி, டாக்டர் காமராஜ் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், சின்னதம்பி, மருதமுத்து, சித்ரா, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், பெத்தநாயக்கன் பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார், ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் தங்கமணி, மகேந்திரன், அர்ஜூனன், பொருளாளர் ஜெகதீசன், தொழில் நுட்ப பிரிவு அருண், ராஜராஜசோழன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். #TNCM #EdappadiPalaniswami
    மாயனூர் காவிரி ஆற்றின் அருகே உள்ள அம்மா பூங்கா விரிவுபடுத்தப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க் கின்றனர்.
    கிருஷ்ணராயபுரம்:

    கரூர் மாவட்டத்தில் பொழுது போக்கு அம்சங்களுக்கு பூங்கா இல்லாத குறையை போக்க மாயனூர் காவிரி ஆற்றின் அருகே திருக்காம்புலியூர் ஊராட்சி பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.49 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. பின்னர் கதவணை பகுதியிலிருந்து தார் சாலை வசதி, வண்ண மீன்கள் அருங்காட்சியகம், உடற்பயிற்சி கூடம், சுற்றுலா பயணிகள் உணவருந்த தனி இடம் என மேலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி திறக்கப்பட்ட இந்த பூங்கா ஓராண்டை நிறைவு செய்து உள்ளது. இந்த ஓராண்டு முடிவில் பூங்காவிற்கு வந்து சென்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபது ஆயிரம் ஆகும். இது மாதத்தில் சராசரியாக பத்தாயிரம் பேர் வந்துள்ளனர் எனக்கொள்ளலாம்.

    ஆனால் கடந்த ஆடி மாதத்தில் மட்டும் அம்மா பூங்காவிற்கு வந்து சென்றோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 192 பேர் ஆகும். இதற்கு காரணம் ஆடி மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் மாயனூர் செல்லாண்டி அம்மனை வழிபட வந்த பக்தர்கள், ஆடி பெருக்கு விழாவிற்கு காவிரி ஆற்றில் புனித நீராட வந்தவர்கள் என்றாலும் அதைவிட அதிக எண்ணிக்கையில் பல்வேறு பகுதியிலிருந்தும் தற்போது காவிரியில் கரை புரண்டு ஓடும் வெள்ள நீரை பார்வையிட வந்த பொதுமக்களே ஆகும். தினந்தோறும் காலை 10 மணிக்கு திறந்து மாலை 6 மணிக்கு மூடப்படும் இப்பூங்காவை விரிவுபடுத்தி நல்லமுறையில் போக்குவரத்து வசதி செய்து கொடுத்தால் இப்பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரிக்கும். அதன் மூலம் அரசின் வருமானமும் உயரும் என சுற்றுல பயணிகள் தெரிவிக்கின்றனர்
    ×